FEFSI / RPL
FEFSI / RPL ( Recognition of Prior Learning )
மத்திய அரசின் இந்த திட்டத்தில் சேறுவதற்கு நம் புகைப்படம், நமது சங்கத்தின் உறுப்பினர் அட்டை நகல், ஆதார் அட்டையின் நகல், மற்றும் ஆதார் எண்ணோடு இணைத்த நம் வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல் போன்றவைகளை FEFSI யிலுள்ள RPL அலுவலகத்தில் சென்று கொடுக்க வேண்டும், அவர்கள் நமது சினிமா தொழிற்கேற்ப தனியாக பிரித்து வைப்பார்கள், பின்னர் அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று எனக்கு இந்த துறையில் நான் வல்லுநன் என்பதற்கு சான்றிதழ் தருகிறார்கள், அச்சான்றிதழ்கள் நமக்கு கிடைத்தும்,நம் வங்கி கணக்கில் ரூபாய் 500 ( ஒரு முறை மட்டுமே) செலுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், ரூபாய் 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு தொகையை நாம் பரிந்துரைக்கும் நபருக்கு அளிக்கின்றனர் ( திருமணம் ஆகாதவர்களுக்கு எப்படி அளிப்பது என்பது சிலர் குறையாக காணலாம்) , தமிழக அரசின் நலவாரியம் திட்டத்தில் விபத்துக்கேற்ப உதவியும், இயற்கை மரணத்திற்கு 15000 ரூபாயும் வழங்கப் படுகிறது. எனது சங்கமான SICA ( Southern India Cinematographers Association ) எங்களுக்கு வயதான உறுப்பினர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கான தொகையை உயிருடன் இருக்கும் போது ஒரு பகுதியும் இறந்த பின் மற்றொரு பகுதியாக கொடுக்கிறார்கள், இதை பெருமையாக நான் இப்போது கூற வேண்டும், நாம் விபத்தில் சிக்கி இறக்க வேண்டும் என்பதில் அரசின் நோக்கமென்ன? இன்றும் பீடி தொழிலாளர்களின் நலத்திட்டத்தில் தான் நாமும் உள்ளோம் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும், இந்திய திரைப்படத் துறைக்கென்று தனி அமைச்சகம் ஒன்று இல்லை, 60000 தொழிலாளர்களுள்ள நமக்கு அரசின் ESIC, PF போன்ற நல திட்டத்தில் இணைத்து தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும், தொழிலாளி இருந்தால் தான் முதலாளி.இந்திய திரைப்படத் துறையிலிருந்து அரசுக்கு செலுத்தும் வரியை ரூபாய் 12500 கோடிக்கு மேல் கிடைக்கின்றது, இந்த பணம் செல்லாக் காசாக அரசிடம் உள்ளது, நமது சங்கத்தின் கூட்டமைப்பான FEFSI இதில் கவனம் செலுத்தி, திரைப்படத் தொழிலாளர் நலன் கருதி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும், வாழும் போது கிடைக்க வேண்டிய சலுகைகள், இறந்த பின் கிடைத்து பயனென்ன , நாலு நாற்காலிகள் போட்டு பேச்சு வார்த்தைகள் என்ற பெயரில் பிரியாணி அருந்தி விட்டு பிரிந்து போகாமலும், உறுப்பினரிகளுக்கு வாட்சப் செயலி மூலம் அவர்களின் துயரை கேட்காமல் நேரடியாக தொழிலாளர்களின் நலன் விசாரிப்பது மிக சிறந்ததாகும்.
Comments
Post a Comment