SARKAR
#CORPORATECRIMINALS 1. SUN TV 2. MURUGADASS #SARKAR #சர்கார் நன்றாக திரையில் ஓடிக் கொண்டிருந்த "96" என்ற திரைப்படத்தை 40 நாட்களுக்குள் சின்னத்திரையில் ஒளிப்பரப்பியது திரைப்படத் துறைக்கு அவமானம். அடுத்தவனின் வயிற்றில் அடித்து எடுத்த திரைப்படம். கலாநிதி மாறன், விஜய் ஆகிய இரண்டு நபர்களின் அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப் பட்ட திரைப்படம். விஜய் அவர்களுக்கு உகந்த கதாபாத்திரமல்ல இத்திரைப்படத்தில். கதாநாயகனுக்கு ஒரு கதாநாயகி தேவை , அதற்காக கீர்த்தி சுரேஷ். எதற்கோ வந்து போகும் யோகி பாபு. நாடகங்களுக்கு வடிவமைத்தது போல் பாடல்களின் அரங்குகள். சண்டை காட்சிகளில் தூள் பறக்கவில்லை. காட்சிகளில் புதுமையில்லை. அருமையான கதை அது திருடப்பட்டிருந்தாலும் , அதை திரைக்கதையாக கையாள்வதில் தோல்வியுற்றார் இயக்குனர். இதை பாடமாக கற்று அடுத்த திரைப்படத்தை , யாரிடமும் இருந்து திருடாமல் இயக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம்...